Posts

Showing posts from April, 2025

அம்புப்படுக்கை சிறுகதை தொகுப்பு - வாசிப்பு

  நான் சமீபத்தில் படித்த மிக திருப்தியளித்த தொகுப்பு இது. தத்துவமும், யோகமும், அறியிவியலும் தொன்மங்களையும் கொண்டு தனது அனுபவங்களையும் தேடல்களையும் கேள்வியாகவும் கதைகளாகவும் மாற்றியிருக்கிறார். மொழியின் கூர்மையும் தேர்ந்திருக்கும் வடிவமும் கதையை இன்னும் ஆழமாக மாற்றியிருக்கிறது. என்னுடைய வாசிப்பில் இத்தகைய ஆழம் கொண்ட சிறுகதைகள் மிக மிக அரிதானவை. மிக முக்கியமான புத்தகத்தின் வழியே தன் வருகையை வலுவாக அறிவித்திருக்கிறார் சுனில். அபாரமான மொழி ஆளுமை வெளிப்படுகிறது, அவரது விவரணைகள் மிக கூரியவையாக வாசிப்பவருக்கு உணர்வுகளை ஆழமாக கடத்தி விடுகிறது. வாசுதேவனின் கதையில் அவரது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலை மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் படி நெருக்கமாக அமைந்திருந்தது. அவருக்கு வைத்தியம் செய்ய செல்லும் சித்த மருத்துவம் படிக்கும் இளைஞனின் எண்ணங்கள், நோயாளியின் பெயர் குறித்து மரபில் இருக்கும் சித்திரத்துடன் முரண் கொள்கிறது. எப்பொதைக்குமான வாழ்வின் பொருள் குறித்த கேள்வியாக அவனுள் மாறிவிடுகிறது. இறுதியில் வாசுதேவனின் மரணத்தையும் அவனது அக்கா குழந்தையின் உயிர் துடிப்பினையும் அருகருகில் வைத்துக் க...