முத்தங்கள் சிறுகதை வாசிப்பு- ஜெயமோகன்
மூக்கன் என்ற திருடன், ஆடு திருட செல்கிறான். கூத்து கலையை முறைப்படி அறிந்தவன். கூத்தில் எல்லாம் சரியாக அமைந்துவிட்டது என்று நினைக்கும் போது பாட்டை மறந்து விட்டு கல்லடி வாங்கிய பெரிய கலைஞர்கள் உள்ளனர் என்று அவர் ஆசிரியர் சொல்லியிருப்பது நினைவிற்கு வருகிறது. திருட்டிலும் அவ்வாறுதான், எதாவது பிசகினால் கொலை செய்யப்பட்டு சங்கிலிகருப்பனின் பரிவாரங்களில் ஒன்றாக இருப்போம் என்கிறார். அவனது அன்றைய களவில் எதிர்பாராமல் தெருநாய் ஒன்றால் பிடிபடும் மூக்கன் தப்பிப்பிழைத்து சைக்கிள் வைத்த திசை மறந்து ஓடுகிறான். அந்த நள்ளிரவில் நீண்ட நேரம் ஓடி பொட்டலில் இருக்கும் நீரற்ற கிணற்றில் விழுகிறான். விழும்போது அவனது நினைவு பிசகி குறைக்கும் நாயும், தனது இருண்ட அறையில் கதவு ஜன்னல்களை திறக்க முடியாமல் தனித்தும், ஆழத்தில் அமிழ்ந்து கொண்டே மணலால் மறைந்து போவதாகவும் தோன்றுகிறது. பின்பு நினைவு தெளிந்து தப்பிக்கும் முயற்சியில் சக்திகளை இழந்து உரக்க கத்தி கூப்பிட வலுவற்று உள்ளே இருக்கும் நாயின் எலும்பில் சீழ்க்கை எழுப்பி, பயன்தராது மயங்குகிறான். அவனது அருகாமையில் ஒரு மெல்லிய கரிய கன்னியை காண்கிறான். வேலாள் என்ன...