Posts

Showing posts from December, 2024

புலிக்கட்டம் சிறுகதை - எஸ் ராமகிருஷ்ணன் - வாசிப்பனுபவம்

புலிக்கட்டம் சிறுகதையின் துவக்கத்தில் களவாட சென்று ஓடு உடைந்து வீட்டுக்குள் விழும் திருடனை ஊர்க்காரர்கள் சேர்ந்து புங்க மரத்தில் கட்டி வைக்கின்றனர். அன்று இரவு முழுவதும் கொட்டும் பனியில் பசி மயக்கத்தில் கிறங்கி நிற்கும் அவனது எண்ண ஓட்டங்களும், கிராம வாசிகளின் முன்பே ஒருமுறை திருடனை பிடித்து அவனை கட்டி வைத்ததால் இறந்து போன உறுத்தலும் சந்திக்கும் புள்ளி தான் கதையாகிறது. கன்னம் ஒட்டிய ஒடிசலான இந்த திருடனை, திருடன் என்று சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அப்படி உருக்குலைந்து இருப்பவன் எதையாவது திருடி வீட்டிற்கு கொண்டு சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் திருட சென்று பிடிபடுகிறான். அவனது குழந்தையில்லா மனைவியின் நினைவுகளும், அவளது பெட்டியில் இருக்கும் வாடிய தாழம்பூவின் நினைவுகளும் உருவாகிறது. பின்பு சிறு வயதில் அவனது அப்பாவினோடு கீதாரிகள் வரும் சமயங்களில் அவர்களோடு சென்று தங்கிய நினைவுகளும், அவர்களில் ஒருவனோடு அப்பா ஆடிய ஆடு புலி ஆட்டமும் நினைவிற்கு வருகிறது. அந்த ஆடு புலி ஆட்டத்தில் வரிசையாக புலியை நகர விடாமல் தடுத்து நிறுத்தப்படுவதால் கோபமுறும் அவனது தந்தை, நள்ளிரவில் இடுப்பிலிருக்கும் கத்தியை ...

விஷக்கிணறு- சுனில் கிருஷ்ணன்

விஷக்கிணறு குறுநாவல் மீதான எனது வாசிப்பு. நான்கு பகுதிகளை கொண்ட குறு நாவலின் ஒவ்வொரு பகுதியும் மிக கூர்ந்த வாசிப்பை கோருவது எண்ணற்ற வாசிப்பு சாத்தியங்களை வாசகருக்கு அளிப்பதாக இருக்கும் என தோன்றுகிறது. இதன் முதல் பகுதியில் வரும் மனைவியின் தற்கொலையால் மனம் வருந்தும் முதியவர். மனைவியின் தற்கொலையும் அதன் மீதான வழக்கும், மனைவியின் மெளனமும் மிகவும் பாதித்து அவரது மனைவியிடம் மன்னிப்பை கோரும் அவரது ஆத்மா. அவரது சந்தோஷ தருணங்களை தன் மரணத்துடன் எடுத்து சென்று விட்டது போல் அவரை விடாமல் துரத்தும் பழைய துர் நிகழ்வுகளின் நினைவுகள், அவரை ஆழ் கிணற்றில் விழ செய்து கொண்டிருக்கிறது. மெலாவாத்தி மலையில் வரும் தண்டனைக் கிணறு படிமமாக்கப்பட்டுள்ளது. இந்த முதல் பகுதி கதைக்குள் உள்ள உள்கதையில் வரும் குரங்கு கூட்டத்தினை கிணற்றில் விஷம் வைத்து கொள்ளும் நிகழ்வு, ஒரு மரபான இந்திய மனம் எவ்வாறு இந்த மனித மனதின் கொடூரத்தை எதிர் கொள்கிறது என்று சொல்வதாக புரிந்து கொண்டேன். அதன் வழியாக அவரும் அவரது சந்ததிகளும் ஒரு விடுதலையை அடைவார்கள் என்றே தோன்றுகிறது. இரண்டாவது பகுதியில் ஒரு தொன்மக் கதை சொல்லப்படுகிறது. இறையின் தீங்கனா...